ரஜினி பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பண மோசடி: பைனான்சியர் வழக்கு

Bookmark and Share

ரஜினி பெயரை பயன்படுத்தி கஸ்தூரி ராஜா பண மோசடி: பைனான்சியர் வழக்கு

மே ஹூன் ரஜினிகாந்த் என்ற இந்திப் படத்தில் தனது பெயரை தவறாக பயன்படுத்தியிருப்பதாகவும், அந்தப் படம் தன்னை தவறாக சித்தரிப்பதாகவும் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட தடைவிதித்தது. இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் பைனான்சியர் முகுல்சந்த் போத்ரா என்பவர் இந்த வழக்கில் தன்னை பிரதிவாதியாக சேர்க்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: இயக்குனர் கஸ்தூரிராஜா என்னிடம் கடன் கேட்டார், நான் தர மறுத்தேன். நான் பணத்தை திருப்பித்தரவில்லை என்றால் என் சம்பந்தி ரஜினிகாந்த் தருவார் என்று கைப்பட எழுதிக் கொடுத்தார்.

அதனால் நான் அவருக்கு கடன் கொடுத்தேன்.  ஆனால் சொன்னபடி கஸ்தூரிராஜா முழு பணத்தையும் திருப்பித் தரவில்லை. திருப்பித் தர ரஜினியும் முயற்சி எடுக்கவில்லை.

வட இந்தியாவில் எடுக்கப்படும் படத்தால் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக வழக்கு தொடரும் ரஜினிகாந்த், தமிழ் நாட்டில் அவர் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சம்பந்தி விஷயத்தில் தலையிடாமல் இருக்கிறார்.

எனவே என்னையும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதுபற்றி ஒரு வாரத்துக்குள் பதில் அனுப்பும்படி ரஜினி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions