சிவாஜிக்கு எப்போதும் யாரும் போட்டி இல்லை - ரஜினி பேச்சு

Bookmark and Share

சிவாஜிக்கு எப்போதும் யாரும் போட்டி இல்லை - ரஜினி பேச்சு

சிவாஜியின் அன்னை இல்லத்தில், விக்ரம்பிரபு தயாரித்து, நடித்திருக்கும் 'நெருப்புடா' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடியோவை ரஜினி வெளியிட்டார்.

நெருப்புடா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி, சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. ரஜினி, சத்யராஜ், விஷால், தனுஷ், விவேக், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிரபு உள்பட திரையுலகைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.

நெருப்புடா' திரைப்படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கியுள்ளார்.விக்ரம் பிரபு தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. ஆடியோவை ரஜினி வெளியிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: இப்போது இந்த தாடியுடன் இங்கு நான் வருவதை சிவாஜி பார்த்திருந்தால், 'என்னடா எனக்குப் போட்டியா?' எனக் கேட்டிருப்பார். ஆனால் அவருக்கு இப்போதும் அல்ல எப்போதும் போட்டிக்கு ஆள் கிடையாது.

அன்னை இல்லம் குறித்து எனக்கு நல்ல நினைவுகள் இருக்கின்றன. 1978ல் சிவாஜி உனக்கு ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் இல்லையென்றால் வீட்டுக்கு வா என்று கூப்பிட்டிருந்தார். பிரியாணி போடுகிறேன் வா என்றார். நானும் வந்தேன்.

ஏதோ என்னை மட்டும்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் 300க்கும் மேல் ஆட்கள் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். 22 வகையான உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

அப்போதுதான் கேள்விப்பட்டேன் அனைத்துத் தரப்பு மக்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு வந்து உணவு உண்டு செல்வார்கள் என்று.

சிவாஜியின் பெயரை விக்ரம் பிரபு காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். அந்த முயற்சி உங்களைக் காப்பாற்றும். இவ்வாறு ரஜினி பேசினார்.


Post your comment





Related News
இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி
கருப்பு சட்டை - கருப்பு வேட்டியில் தெறிக்க விட்ட ரஜினி ரசிகர்கள்
காலா படத்தை கர்நாடகாவில் திரையிட எதிர்ப்பதா? - ரஜினிக்கு ஆதரவாக பா.ஜ.க. தலைவர் வாய்ஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கினார் ரஜினிகாந்த்
ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை
காலா பட உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
இனி ரஜினியை விமர்சித்தால் நடக்கறதே வேற - ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை.!
சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது வன்முறையின் உச்சகட்டம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
காலா படம் எப்படி இருக்கும்? - சென்சார் போர்டின் விமர்சனம்.!
காவிரி மேலாண்மை அமைத்தே ஆக வேண்டும் - ரஜினிகாந்த் கொந்தளிப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions