கபாலியில் 2 தோற்றங்களில் தோன்றும் ரஜினிகாந்த்!

Bookmark and Share

கபாலியில் 2 தோற்றங்களில் தோன்றும் ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’  படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தற்போது கோவாவில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ரஜினிகாந்த் மற்றும் படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. 

இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. வெள்ளை தாடியுடன் கோட்-சூட் அணிந்து மிடுக்காக வருவது போன்ற படங்கள் இணைய தளங்களில் வெளிவந்தன. 

இந்த நிலையில் ரஜினிகாந்த் தாடி இல்லாமல் கண்ணாடி அணிந்து இளமை தோற்றத்தில் இருப்பது போன்ற இன்னொரு படமும் வாட்ஸ்-அப் மற்றும் இணையதளங்களில் நேற்று வெளிவந்தது. கோவாவில் நடந்த படப்பிடிப்பில் இந்த படத்தை எடுத்துள்ளனர். 

இதன்மூலம் ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் 2 தோற்றங்களில் நடிப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வயது குறைந்த தோற்றத்தில் நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டில் ‘கபாலி’ படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions