ரஜினிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்?

Bookmark and Share

ரஜினிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைப்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பிரம்மாண்ட படம் ‘எந்திரன்’. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினியை வைத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க ஷங்கர் திட்டமிட்டார். அதற்கான பணிகளை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், இப்படத்தில் ரஜினியுடன் நடிப்பதற்கு தமிழ், இந்தி என பல மொழிகளிலும் உள்ள முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். அமீர்கான், ஷாருக்கான், ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஆகியோர் வரை இந்த படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது. ஆனால், கடைசியில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக விக்ரம் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்கள். 

அதேபோல், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகையையும் பல்வேறு மொழிகளில் தேடி வந்தனர். தற்போது பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்பை இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

இதுகுறித்து, சமீபத்தில் கத்ரீனா கைப்பை இயக்குனர் ஷங்கர் சந்தித்து பேசியதாகவும், அதற்கு அவர் எந்த பதிலும் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

கத்ரீனா கைப், ஏற்கெனவே ரஜினிக்கு ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடிக்க வேண்டியவர். அந்த நேரத்தில் சில காரணங்களால் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க முடியாமல் போனது. பிறகு அந்த வாய்ப்பு தீபிகா படுகோனே வசம் சென்றது. 

தற்போது, மீண்டும் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பு கத்ரீனாவுக்கு தேடிவந்து கிடைத்துள்ளது. அதை அவர் ஏற்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

‘எந்திரன்’ 2-ம் பாகத்தை இந்த வருடத்தின் இறுதியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை ‘கத்தி’ படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருப்பது குறிப்படத்தக்கது.


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions