நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது- ரஜினி கருத்து

Bookmark and Share

நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது- ரஜினி கருத்து

உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி.எஸ்.கைலாசத்தின் 100வது பிறந்த நாளையட்டி அவரது தபால் தலை வெளியிடும் விழா நேற்று சென்னையில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது, “நீதிபதி கைலாசத்தின் தபால் தலையை நான் பெற்றுக் கொள்வதற்கு ஒரே தகுதி, நான் அவர் குடும்பத்திற்கு நெருக்கமானவன் என்பதுதான்.

அவரது மனைவி சவுந்திரா கைலாசம் ஆன்மீத்தில் பெரிய ஞானம் பெற்றவர். இதை எங்கு பெற்றீர்கள் என்று ஒரு முறை கேட்டேன். கணவர் கைலாசத்திடமிருந்து பெற்றதாக சொன்னார். அப்படியென்றால் கைலாசம் எவ்வளவு ஞானம் பெற்றவராக இருக்க வேண்டும். அவர் பெரிய நீதிமான். 

இந்த நாடு நீதிமன்றங்களை நம்பித்தான் இருக்கிறது. அரசியல்வாதிகள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும். மக்கள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும். ஆனால் நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது.”இவ்வாறு ரஜினி பேசினார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions