ரஜினியுடன் நடிக்க ஆசை: தனுஷ்

Bookmark and Share

ரஜினியுடன் நடிக்க ஆசை: தனுஷ்

தனுஷ் ஏற்கனவே தனது படங்களுக்கு ‘மாப்பிள்ளை’, ‘படிக்காதவன்’, ‘பொல்லாதவன்’ போன்ற ரஜினி பட தலைப்புகளை சூட்டி உள்ளார். அடுத்து அவருடன் இணைந்து நடிக்க தயாராகி வருகிறார்.

இந்தி, தெலுங்கு பட உலகில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது சகஜமாக இருக்கிறது. மலையாள படங்களில் அது போல் நடிக்கின்றனர்.

ஆனால் தமிழில் மட்டும் ஒரு கதாநாயகன் மட்டும் நடிப்பது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் அந்த நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.

ராஜா ராணி படத்தில் ஆர்யாவும், ஜெய்யும் இணைந்து நடித்தனர். வேட்டை படத்தில் ஆர்யாவும், மாதவனும் நடித்தார்கள்.

ரஜினி நடிக்கும் எந்திரம் 2–ம் பாகத்தில் இன்னொரு முன்னணி கதாநாயகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தனுசும் ரஜினியுடன் புது படமொன்றில் விரைவில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து தனுஷ் கூறும்போது, ரஜினியுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன். ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி தற்போது நடிக்கிறார். அந்த படத்தில் நடிக்க என்னையும் ரஞ்சித் பரிசீலிப்பார் என நம்புகிறேன் என்றார்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions