ரஜினி படங்களின் பட்ஜெட், 70 மற்றும் 300 கோடி.?!

Bookmark and Share

ரஜினி படங்களின் பட்ஜெட், 70 மற்றும் 300 கோடி.?!

ரஜினிகாந்த் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவையிரண்டும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பு மட்டும்தான் வெளிவரவில்லை.

ரஜினிகாந்த், 'கோச்சடையான்' படம் சம்பந்தமாக ஈராஸ் நிறுவனத்திற்குத் தரவேண்டிய கடன் தொகைக்காகத்தான் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கிறார் என கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்க உள்ளாராம். இந்தப் படத்திற்கான மொத்த பட்ஜெட் 70 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். ரஜினியின் சம்பளம் மட்டுமே 30 கோடி என்கிறார்கள்.

அந்த முழுத் தொகையையும் படத்தைத் தயாரிக்கப் போகும் தாணு டிடியாக எடுத்துக் கொடுத்து விட்டாராம். மீதமுள்ள 40 கோடி ரூபாயில் படத்தின் தயாரிப்புச் செலவு, இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தை அடக்கிவிட வேண்டுமாம். படத்தின் இயக்குனர் ரஞ்சித்துக்கும் 10 லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுவிட்டதாம். இந்தப் படத்தை 2016 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

அடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படம் அநேகமாக 'எந்திரன் 2' படமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு பிரம்மாண்டமான கதையாகவோ உருவாக உள்ளதாம். இந்தப் படத்திற்கான கதை விவாதம் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது.

இப்படத்தை 'கத்தி' படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி ரூபாயாம். அதில் ரஜினியின் சம்பளம் மட்டுமே 50 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஆமீர்கான், கமல்ஹாசன், விக்ரம் ஆகியோரது பெயர்கள் அடிபட்டன.

தற்போது ஷாரூக்கானிடமும் பேசி வருகிறார்களாம். ஒரே சமயத்தில் தமிழ், ஹிந்தியில் இப்படம் உருவாக்கப்பட உள்ளதாம். தமிழில் ரஜினிகாந்த் நாயகன், ஷாரூக்கான் வில்லன், ஹிந்தியில் ஷாரூக்கான் நாயகன், ரஜினிகாந்த் வில்லன் என திட்டமிட்டுள்ளார்களாம்.

ரஜினிகாந்த் மீது ஷாரூக்கானுக்கு எப்போதுமே ஒரு மரியாதை உண்டு. அதனால் அவர் நடிக்க சம்மதிக்கலாம் என்கிறார்கள். இந்தப் படத்தை 2017ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தெரிகிறது.

மேற் சொன்ன இரண்டு படங்களின் தயாரிப்பும் முடிவடைந்த பின் அந்தப் படங்களை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களே சொந்தமாக வெளியிட வேண்டும் என்று ரஜினிகாந்த் கன்டிஷன் போட்டுள்ளாராம்.

'லிங்கா' போன்ற பிரச்சனை மீண்டும் ஏற்படுவதை அவர் விரும்பவில்லையாம். இரண்டு படங்களின் வியாபாரத் தொகையுடன் மொத்த தயாரிப்புத் தொகையை கழித்த பின் வரும் தொகையில் ரஜினிக்கு குறிப்பிட்ட சதவீதத்தைத் தயாரிப்பாளர்கள் தரவேண்டுமாம். இதுதான் ரஜினிகாந்த் படங்களைப் பற்றி தற்போது கோலிவுட்டில் உலா வரும் தகவல்கள்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions