சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லையா ரஜினி- இது என்ன புது புகார்

Bookmark and Share

சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லையா ரஜினி- இது என்ன புது புகார்

நான் சொல்றத செய்வேன், செய்றத சொல்வேன் என்ற ரஜினி வசனம் ஒன்று உள்ளது. அந்த வசனத்திற்கு ஏற்ப வாழ்ந்தும் வருகிறார் ரஜினி.

இன்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு அவர்கள் ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் நேரில் சந்தித்தார்.

அப்போது, ஏற்கெனவே வாக்குறுதி கொடுத்தபடி தேசிய நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ரூ.1 கோடி தருவதாக கூறியது குறித்து அவரிடம் அய்யாக்கண்ணு மனு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதற்கு முன் ரஜினியின் சகோதரர் ஒரு பேட்டியில், ரஜினி ஏற்கனவே நதிநீர் இணைப்புக்கு அறிவித்தபடி ரூ.1 கோடியை வங்கியில் டெபாசிட் செய்து விட்டதாகவும், நதிநீர் இணைப்பு பணிகள் துவங்கும்போது, சம்பந்தப்பட்டோரிடம் அந்த பணத்தை தருவார் என்றும், சொன்னால் சொன்னபடி செய்வார், அது தான் ரஜினிகாந்த் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இவர்களது சந்திப்பிற்கு இதுதான் காரணம் என்று செய்திகள் வருவது ரஜினியின் ரசிகர்களை பாதித்துள்ளது.

 


Post your comment





Related News
2.0 பட டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது - ரசிகர்கள் கொண்டாட்டம்!
பேசிக்கொண்டிருக்கிறேன்! அரசியல் பற்றி ரஜினிகாந்த் புதிய பேட்டி
‘காலா’ படப்பிடிப்பு அரங்கத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
ரஜினியின் 2.0 பட ஆடியோ வெளியீட்டு விழா எங்கு எப்போது தெரியுமா?- பிரம்மாண்ட பிளான்
ரஜினியாக நடிக்கும் அரவிந்த் ஆகாஷ்
ரஜினியும் விஜயும் ஒன்றாக கைகோர்க்கிறார்களா?
நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்? போட்டோ லீக்
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
ரஜினி அரசியலுக்கு வரக்கூடாதா? நடிகர் செந்தில் பளீர் பதில்
காலா படத்தில் இணைந்த மங்காத்தா நடிகர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions