ரிலீஸாவதற்கு முன்பே ரூ.110 கோடி வசூலித்த ரஜினியின் 2.0: எப்படி தெரியுமா?

Bookmark and Share

ரிலீஸாவதற்கு முன்பே ரூ.110 கோடி வசூலித்த ரஜினியின் 2.0: எப்படி தெரியுமா?

ரஜினியின் 2.0 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் 2.0. ரஜினி நடிப்பில் ஹிட்டான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் தான். படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது.

2.0 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் ரூ.110 கோடிக்கு வாங்கியுள்ளது. படத்தின் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகளும் இந்த டீலில் அடக்கம்.

சாட்டிலைட் உரிம விற்பனையில் பாகுபலி 2 படத்தை 2.0 முந்தியுள்ளது. பாகுபலி 2 படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ.97 கோடிக்கு(இந்தி- ரூ. 51 கோடி, தெலுங்கு- ரூ. 26 கோடி, தமிழ்-மலையாளம்- ரூ.20 கோடி) விலை போனது.

ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தின் இந்தி பதிப்பின் சாட்டிலைட் உரிமம் மட்டுமே ரூ. 75 கோடிக்கு விலை போனது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 2.0 படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் நிலையில் படம் ரிலீஸாவதற்கு முன்பே ரூ.110 கோடி வசூலித்துவிட்டது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.


Post your comment





Related News
2.0 டீசர் விமர்சனம் - படத்தின் கதை இதுவா?
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினியின் 2.O டீசர் வெளியாகும் தேதி அறிவிப்பு
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்
ஆதி நடிக்கும் ஆர் எக்ஸ் 100
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
புதுமுகங்களை வைத்து படம் இயக்கி இருக்கும் விஜய் பட இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions