ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கும் ரசிகர்கள்!

Bookmark and Share

ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கும் ரசிகர்கள்!

லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்கும் பிரச்சினை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே வருகிறது. முதலில் பேச்சுவார்த்தையில் தொடங்கியவர்கள், பின்னர் உண்ணாவிரதம் இருந்தனர். அதையடுத்து பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

அதோடு, நில்லாமல் அந்த போராட்டத்தை ஒரு அரசியல்வாதியே தொடங்கி வைப்பார் என்று சொல்லி, சினிமா பிரச்சினையை அரசியலோடு முடிச்சு போட்டு விட்டனர். விளைவு, அந்த அரசியல்வாதி திருமாவளவன் என்றொரு செய்தி பரவத் தொடங்கியது.

அதையடுத்து, அதற்கு அந்த கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு விட்டது. அதேபோல் ரஜினியை எங்களுக்கு நஷ்டஈடு தர விடாமல் சரத்குமாரும், விஜய்யும்தான் தடுக்கிறார்கள் என்று அவர்கள் கூறியதற்கு, தற்போது சரத்குமாரும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பலதரப்பினரும் ரஜினிக்கு ஆதரவாக கருத்து சொல்லி வரும் நிலையில், இதுவரை பொறுமையாக இருந்து வந்த ரஜினியின் ரசிகர்களும் அடுத்து அவருக்கு ஆதரவான போட்டத்தில் குதிக்கின்றனர்.

அதாவது, லிங்கா விநியோகஸ்தர்கள் மெகா பிச்சை போராட்டம் நடத்தப்போகும் அன்றைய தினத்தில் தமிழகமெங்கிலும் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தினர் சார்பில் விநியோகஸ்தர்களுக்கு எதிரான போராட்டம் நடைபெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

இதன்காரணமாக, லிங்கா பிரச்சினை மேலும் பரபரப்படைந்திருக்கிறது. இதையடுத்து ரஜினி என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 


Post your comment

Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படம் ஆணவ கொலை கதையா?
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
ரஜினி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் பேட்ட படக்குழு
ரஜினிகாந்த் நலமாக உள்ளார் - வதந்திகளை நம்ப வேண்டாம்
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions