ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

Bookmark and Share

ரஜினிகாந்த் தொடர்ந்த வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு

‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினி காந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு கடந்த 11–ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமா பைனான்ஸ்சியர் முகுல்சந்த் போத்ரா, தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார். அதில், வடமாநிலத்தில் வெளியாகும் திரைப்படத்தினால், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என்று ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால், அவரது சம்பந்தி கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் பெயரை கடன் வாங்கி அதை திருப்பித்தராமல் உள்ளார். இதுகுறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகியும், ரஜினிகாந்த் தன் பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக கருதாமல் உள்ளார். எனவே, என்னையும் இந்த வழக்கில ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்ற கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரஜினிகாந்த் சார்பில் ஆஜரான வக்கீல், ‘தன் கட்சிகாரர் ரஜினிகாந்தை தொடர்புக் கொள்ள முடிய வில்லை என்றும் அவரது கருத்தை கேட்டு பதில் மனு தாக்கல் செய்வதாக’ கூறினார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions