ரஜினிகாந்த் 24-ந்தேதி சென்னை திரும்புகிறார்!

Bookmark and Share

ரஜினிகாந்த் 24-ந்தேதி சென்னை திரும்புகிறார்!

ரஜினிகாந்த் ‘கபாலி’ பட வேலைகளை முடித்து விட்டு கடந்த மே மாதம் ஓய்வுக்காக குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். ‘கபாலி’ பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அவர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர் வரவில்லை. இதனால் விழாவை ரத்து செய்து இணையதளங்களில் டிரைலரை வெளியிட்டனர். 

இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக அமெரிக்க ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவதாகவும் வதந்திகள் பரவின. இதனை அவரது குடும்பத்தினர் மறுத்தார்கள். அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். 2 வாரங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகள் நடந்தன.

ஆனால் திடீரென்று அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அவர் உடல் நிலை பற்றி மீண்டும் வதந்தி பரவியது.

இதற்கிடையில் ரஜினிகாந்தும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் வெர்ஜினியாவில் உள்ள சச்சிதானந்த சாமிகள் ஆசிரமத்துக்கு சென்று சாமி கும்பிட்டனர். சச்சிதானந்த சாமிகள் ரஜினிகாந்தின் குரு என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ரஜினிகாந்த் உடல் நிலை பற்றி பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

தற்போது ‘கபாலி’ படத்தை 22-ந்தேதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கின்றன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் உலகம் முழுவதும் இந்த படம் திரைக்கு வருகிறது. அமெரிக்காவில் ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தை பார்ப்பதற்கு விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இன்று (புதன்கிழமை) அங்குள்ள ஒரு திரையரங்கில் ‘கியூப்’ மூலம் கபாலி படத்தை தனது குடும்பத்தினருடன் அவர் பார்க்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் எப்போது சென்னை திரும்புவார் என்று பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு 24-ந்தேதி நள்ளிரவு அவர் சென்னை வர இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions