ரஜினி, விஜய்யை கட்டாயப்படுத்தி நடிக்கவைக்கிறாரா தாணு?

Bookmark and Share

ரஜினி, விஜய்யை கட்டாயப்படுத்தி நடிக்கவைக்கிறாரா தாணு?

திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை கலைப்புலி எஸ்.தாணு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்  என்று தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் கோரிக்கை வைத்திருக்கிறார்.

அக்கோரிக்கையில் “நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு ஒருதலைப்பட்சமாக யாரையும் கலந்து ஆலோசிக்காமல் திரு.சரத்குமார் அணிக்கு ஆதரவு அளித்து அனைத்து தயாரிப்பாளர்களையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினார்.

திரு.சரத்குமாரை நடிகர் சங்கத் தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு ஆதரித்ததற்கான ஒரே காரணம் “எஸ்.பி.ஐ. சினிமாஸ் உடன் நடிகர் சங்கம் போட்டிருந்த ஒப்பந்தத்திற்கும் தாணு அவர்களுக்கும் தொடர்பு இருந்திருக்கலாம்”. 

அதே போல் தயாரிப்பாளர் சங்கத்தில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது, ஆனால் தாணு மூச்சுக்கு மூச்சு தமிழக முதல்வர் பெயரை உச்சரித்து அவரையும் ஏமாற்றி இந்தப் பதவியில் அமர்ந்து கொண்டு பிரபல நடிகர்களின் கால்சீட்டுகளை வலுக்கட்டாயமாகப் பெற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். 

(தாணு, இப்போது ரஜினி நடிக்கும் கபாலி படத்தையும், விஜய் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறார்) இவரைப் போன்ற சுயநல வியாபாரிகள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. 

எனவே தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அவரை அப்பதவியிலிருந்து நீக்க ஒரு முடிவு எடுக்க வேண்டும். இது ஆரம்பம் தான், இது தொடர்பாக தயாரிப்பாளர் பலருடன் கலந்து ஆலோசித்து அவருக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி தயாரிப்பாளர்கள் சங்கம் நடுநிலையுடன் செயல்படப் பாடுபடுவேன்” என்று கூறியிருக்கிறார்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions