ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் காளி?

Bookmark and Share

ரஜினி-ரஞ்சித் படத்தின் டைட்டில் காளி?

அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் மலேசியாவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த படத்தின் டைட்டிலை முடிவு செய்வதில் தனது உதவியாளர்களுடன் ரஞ்சித் தீவிரமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ரஜினியின் கேரக்டர் குறித்து கருத்து கூறிய ரஞ்சித், 'இந்த படத்தின் மூலம் மீண்டும் அவரை முள்ளும் மலரும்' காளியை பார்க்கலாம் என்று கூறியிருந்தார் என்பது நாம் அறிந்ததே.

மேலும் ரஞ்சித்தின் முந்தைய படமான 'மெட்ராஸ்' படத்தின் நாயகன் கார்த்திக்கின் பெயரும் 'காளி' தான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே 'காளி' என்ற பெயர் ஏற்கனவே அவரை அதிகம் கவர்ந்திருப்பதால், 'காளி' என்ற பெயரையே அவர் இந்த படத்தின் டைட்டிலாக வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

முத்து படத்திற்கு பின்னர் ரஜினி நடித்த படங்களின் டைட்டில்கள் பெரும்பாலானவை அவரது கேரக்டரின் பெயராகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி கடந்த 1980ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபல இயக்குனர் ஐ.வி.சசியின் இயக்கத்தில் 'காளி' என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions