ரஜினி வீட்டின் முன்பு உண்ணாவிரதம்- டி.பி.கஜேந்திரன் ஆவேசம்

Bookmark and Share

ரஜினி வீட்டின் முன்பு உண்ணாவிரதம்- டி.பி.கஜேந்திரன் ஆவேசம்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களைக் காப்பாற்றக் கோரி இன்று நடைபெற்ற உண்ணாவிரத்த்தில் ஏ.எல்.அழகப்பன், டி.பி.கஜேந்திரன், ரூபன்,கிருஷ்ணகாந்த், மணிமாறன், பி.டி.செல்வகுமார், ராமதுரை, அருள் சிவா, ரகு, சௌந்தர் உள்ளிட்ட தயாரிப்பாளர்களுடன் இளம் தயாரிப்பாளர்களும் இணைந்து 200 தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். சிறு தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

குறிப்பாக டி.பி.கஜேந்திரன் பேசும் போது தற்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் கலைப்புலி  தாணு சுயநலத்துடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

தன்னுடைய நலனுக்காக ரஜினியிடம் குறுக்கு வழியில் கால்ஷீட் வாங்கிய அவர் தயாரிப்பாளர்களின் நலனில் ஒருபோதும் அக்கறை கொள்ளவில்லை என வருத்தப்பட்டார்.

தயாரிப்பாளர்களின் துன்பம் அவர்கள் படும் இன்னல்கள் முடிவுக்கு வரவேண்டும் என்றால் கபாலி படம் வெளிவருவதற்கு முன் ரஜினி வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினால் தான் தயாரிப்பாளர் சங்கம் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு ஒரு முடிவு ஏற்படும் எனக் கூறினார்.

இதை உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட மற்ற தயாரிப்பாளர்களும் ஆமோதித்தனர்.  அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக  நாளை அனைவரும் கலந்து ஆலோசனை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions