நான் ஆச்சரியப்பட்ட தலைவர் மறைந்தது கருப்பு தினம் - ரஜினி டுவீட்

Bookmark and Share

நான் ஆச்சரியப்பட்ட தலைவர் மறைந்தது கருப்பு தினம் - ரஜினி டுவீட்

கடந்த வருடம் மே மாதம் 'கோச்சடையான்' படத்திற்காக டிவிட்டர் கணக்கை ஆரம்பித்து புதிய சாதனை புரிந்தார் ரஜினி. அப்போது நான்கைந்து பதிவுகளை மட்டும் போட்டு விட்டு, அத்துடன் எந்த பதிவையும் போடுவதையும் ஏழு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி விட்டார்.

மீண்டும் அவருடைய பிறந்த நாளன்று பிரதமருக்கு வாழ்த்து சொன்னதற்காக நன்றியையும், ரசிகர்களுக்கு நன்றியையும் தெரிவித்திருந்தார். அதன் பின் 'லிங்கா' படம் பற்றி பல பிரச்சனைகள் எழுந்த போதும் அது குறித்து எந்த விதமான பதிவையும், கருத்தையும் அவர் பிரச்சனை முடிந்த இதுவரை தெரிவிக்கவில்லை.

இரு தினங்களுக்கு முன் மறைந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவிற்காக ஒரு இரங்கல் செய்தியை தெரிவத்ததன் மூலம் மீண்டும் டிவிட்டரில் ஒரு பதிவைப் போட்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் அவருக்கு பிடித்த தலைவராக லீ குவான் யூவைத்தான் எப்போதுமே சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பேட்டிகளிலும் அவரைப் பற்றி உயர்வாக பேசியிருக்கிறார்.

“நான் ஆச்சரியப்பட்ட ஒரு தலைவர் மறைந்தது ஒரு கருப்பு தினமாகும். உங்கள் துக்கத்தை நானும் உணர்கிறேன், சிங்கப்பூர். சிறந்த பாதையை அமைத்துக் கொடுத்த ஒரு அரசியல்வாதியின் உண்மையான இழப்பு,” என்று அவர் லீ குவான் யூ மறைவு பற்றி இரங்கல் தெரிவித்துள்ளார். டிவிட்டரில் தேவையான சமயத்தில் மட்டுமே பதிவு போடுவதும் ரஜினி ஸ்டைல் போலிருக்கிறது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions