திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

Bookmark and Share

திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி

இன்று திருமண நாள் காணும் ரஜினிகாந்த், தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களைச் சந்தித்தார். ரஜினி - லதா தம்பதியினருக்கு இன்று 35 வது திருமண நாளாகும். வழக்கமாக ஆண்டின் விசேஷ நாட்களில் ரஜினி வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்துவதும் வாழ்த்துகள் பெறுவதும் ரசிகர்களின் வழக்கம்.

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினி பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் தவறாமல் ரஜினியின் வீட்டு முன் கணிசமான ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.

பெரும்பாலும் அவர்களை ஏமாற்றாமல், சந்தித்து வாழ்த்தி அனுப்புவார் ரஜினி. அவர் இல்லாத நேரங்களில் லதா ரஜினி ரசிகர்களைச் சந்திப்பார். இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அடுத்து இன்று திருமண நாளன்றும் சந்தித்தார்.

காலையிலேயே ரஜினி - லதா தம்பதியரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை ரஜினியின் உதவியாளர் சத்தியநாராயணா ஒழுங்குபடுத்தினார். பின்னர் ரஜினி வெளியில் வந்து சிறு மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கும்பிட்டார்.

ரசிகர்கள் அவரைப் பார்த்து தலைவா.. வாழ்த்துகள் என்று முழங்கினர். அவரும் சிரித்தபடி நன்றி கூறி வாழ்த்துகளை ஏற்றார்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions