ரஜினி பாட்டை ரசித்து பாடிய மோகன்லால்

Bookmark and Share

ரஜினி பாட்டை ரசித்து பாடிய மோகன்லால்

மலையாள சினிமாக்களில்அது மோகன்லால் அல்லது மம்முட்டி நடித்த படங்களாக இருந்தாலும் கூட, காட்சிக்கேற்றவாறு ரஜினி, கமல் இருவரின் பெயர்களை, படங்களை தங்களது சில படங்களில் பயன்படுத்துவார்கள்.
இது ஒரு வகையில் மலையாளத்தில் உள்ள தமிழ் ரசிகர்களை வசியப்படுத்தும் தந்திரம் தான் என்றாலும் அதிலும் யதார்த்தம் மீறாமல் அதை செய்வார்கள். சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியா லோஹம் படத்திலும் இது நிகழ்ந்துள்ளது. படத்தில் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆட்டோ ட்ரைவராக, மோகன்லாலுக்கு தெரிந்த நண்பராக நடித்துள்ளார்.
இவர் மோகன்லாலை பார்ப்பதற்காக தனது ஆட்டோவில் வந்து இறங்குவார். அப்போது மாடியில் இருந்த மோகன்லால் கீழே ஆட்டோவில் வந்திறங்கிய அஜுவை பார்த்து பாட்ஷா படத்தில் இடம்பெற்ற “நான்.. ஆட்டோகாரன்.. ஆட்டோகாரன்” பாடலின் சில வரிகளை ரசித்து பாடுவார்.. 
ஒரு சூப்பர்ஸ்டார் இன்னொரு சூப்பர்ஸ்டார் பாடலை பாடுவது என்பது அபூர்வமானதுதானே. தியேட்டரில் படம் பார்க்கும் ரசிகர்கள் இந்த இடத்தில் ஆரவாரம் செய்வதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
ரஜினி பாடல் மட்டுமல்ல, ஒருமுறை கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது, “என் பேரு மீனா குமாரி” என்கிற கந்தசாமி பட பாடலை சத்தமாக முணுமுணுக்க, பின்னால் அமர்ந்திருக்கும் ஆண்ட்ரியா முறைப்பதை பார்த்து சட்டென பாடுவதை நிறுத்திக்கொள்வார் மோகன்லால்.
இதேபோன்று பல வருடங்களுக்கு முன் வெளியான மம்முட்டி நடித்த மாயாவி என்கிற படத்தில் காமெடி நடிகரான சுராஜ், மம்முட்டியை பார்த்து, “யாருக்காவது எங்கேயாவது கஷ்டம் வந்துச்சுன்னா ஓடிப்போய் ஹெல்ப் பண்றதுக்கு நீ என்ன ரஜினிகாந்தா?”,என கிண்டல் பண்ணுவார். இதிலிருந்து கேரளாவையும் ரஜினி மாஸ் விட்டுவைக்கவில்லை என்பது தெரிகின்றது.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions