ரஜினியின் கபாலி தலைப்பு முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

ரஜினியின் கபாலி தலைப்பு முடிவுக்கு வந்தது!

ரஜினி, தனது வழக்கமான இயக்குநர்களின் படங்களில் நடிக்காமல், இளம்வயது இயக்குநர்களின் படங்களில் நடித்தால் தான் துறையில் தாக்குபிடிக்க முடியும் என்பதை உணர்ந்தார்.

இதனையடுத்து, பல்வேறு இயக்குநர்களிடம் தொடர்ந்து கதைகேட்டு வந்தார்.  இறுதியில் இயக்குநர் ரஞ்சித்திடம் கதை கேட்டு, பிடித்து விட்டதால் உடனடியாக  இயக்குநர் ரஞ்சித் இயக்க, கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க ரஜினி நடிக்கும் கபாலி என்று அறிவிப்பு வெளியானது.

இப்படத்தின் தலைப்பால் பிரச்சனை உருவானது. இப்போது  கபாலி தலைப்பு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது  குறித்து  தாணு, "தென்னிந்திய பிலிம் சேம்பரில் படத் தலைப்புக்கு என்று ஒரு பிரிவு இருக்கிறது.

மூன்று தலைப்புகள் எழுதிக் கொடுத்து, இவை வேறு யாரிடமாவது இருக்கிறதா என்று கேட்டோம். யாரிடமும் இல்லை என தெரிவித்தார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் கேட்டோம், அவர்களும் யாரிடமும் இல்லை என கூறினார்கள்.

அதற்குப் பிறகு தான் முறையாக பதிவு செய்து, அறிவிக்கப்பட்ட தலைப்பு தான் கபாலி. பின்னர், சிவகுமார் என்பவர் வந்து படத்தலைப்பு குறித்து பேசினார்.

அவர்களிடம் எங்களது தரப்பு நியாயத்தைச் சொன்னோம், பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்கள். தலைவர் எங்களது பெயரில் படம் பண்ணுவது சந்தோஷம் என்று சிவக்குமார் கூறிவிட்டதாக, தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions