ரஜினியின் கபாலி, 2.0 படங்கள் எப்போது ரிலீஸ்?

Bookmark and Share

ரஜினியின் கபாலி, 2.0 படங்கள் எப்போது ரிலீஸ்?

இரண்டு வருடத்திற்கு ஒரு படம் அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படத்தில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்ததால் ரஜினியின் புதுப்படம் எப்போது அறிவிக்கப்படும் என அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்துவந்தனர். மேலும் அவரது படம் அறிவிக்கப்படும்போதெல்லாம் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் தான்.

இந்நிலையில் ஒரு படத்துக்கும் அடுத்த படத்துக்கும் நீண்ட இடைவெளிவிட்ட ரஜினி கடந்த சில வருடங்களாக இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இந்த வழக்கத்தையும் மிஞ்சுகிறவகையில் இப்போது கபாலி, 2.0 என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக பரபரப்பாக நடைபெற்று வந்தது.  கபாலி ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க, இன்னொருபுறம் ஷங்கர் இயக்கத்தில் எந்திரனின் 2 ஆம் பாகத்திலும் நடிக்கத் தொடங்கிவிட்டார் ரஜினி.

கபாலியின் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை பிப்ரவரிக்குள் முடித்துவிட்டு, ஏப்ரலுக்குப் பிறகு 2.0 படத்தில் முழுமூச்சில் நடிக்கவிருக்கிறாராம் ரஜினி.  கபாலி படத்தை  2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் தேதி வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது. 2.0 படத்தை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions