சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்கும் சக்தி?

Bookmark and Share

சந்திரமுகி 2ம் பாகத்தில் நடிக்கும் சக்தி?

ரஜினியை வைத்து பி.வாசு இயக்கிய ‘சந்திரமுகி’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது பி.வாசு கன்னடத்தில் இயக்கும் படங்கள் வெற்றிப்படங்களாகி வருகின்றன.

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய ‘திரிஷ்யம்’ படத்தை கன்னடத்தில் பி.வாசு. இயக்கினார். இந்த படத்தில் ரவிச்சந்திரன், நவ்யாநாயர் நடித்தனர்.

சிவராஜ்குமார், வேதிகா நடித்த ‘சிவலிங்கா’ கன்னட படத்தையும் இவர் இயக்கினார். இந்த கன்னட படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பி.வாசுவுக்கு கன்னட வெற்றிப்பட இயக்குனர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் ‘சிவலிங்கா’ கன்னட படத்தை ‘சந்திரமுகி–2’ என்ற பெயரில் தமிழில் பி.வாசு ரீமேக் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் இதை பிரமாண்டமாக தயாரித்து இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளார்.

இதில் ராகவா லாரன்ஸ், அனுஷ்கா ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பி.வாசுவின் மகனான சக்தி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions