வெனிஸ் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பற்றிய டாகுமென்டரி

Bookmark and Share

வெனிஸ் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் பற்றிய டாகுமென்டரி

தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளவர் ரஜினிகாந்த். இவருடைய படம் வெளிவந்தாலே திருவிழாக் கோலம்தான்.

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் விஷயம் அது. இப்போது ஒன்றிரண்டு வயது ஆகும் குழந்தைகள் கூட ரஜினிகாந்த் படத்தைப் பார்த்தாலே நடனம் ஆட ஆரம்பித்து விடுகின்றன.

அப்படி ஒரு மாயத்தை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த்.அவரைப் பற்றியும், அவருடைய ரசிகர்களைப் பற்றியும் தயாரிக்கப்பட்டுள்ள டாகுமென்டரி படம் ஒன்று வெனிஸ்-ல் நடைபெற உள்ள 72வது சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

ரிங்கு கால்சி என்பவர் தன்னுடைய நண்பர் ஜோயோஜீத் பால் என்பவருடன் இணைந்து இந்த டாகுமென்டரியை உருவாக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த்தின் மிகப் பெரிய கட்-அவுட்டுகள், அதற்கு நடக்கும் பாலாபிஷேகம், ஊர்வலங்கள், ரஜினிகாந்த் ரசிகர்கள் நடத்தும் மற்ற சமூக நல உதவிகள் உட்பல பல விஷயங்களை இணைத்திருக்கிறார்களாம்.

இந்த டாகுமென்டரியை உருவாக்குவதற்காக தான் வேலை பார்த்த தொலைக்காட்சி நிறுவனப் பணியை ராஜினாமா செய்து விட்டு வந்திருக்கிறார் ரிங்கு. இந்த டாகுமென்டரியை கடந்த நான்கு வருடங்களாக உருவாக்கி வருகிறார்களாம்.

மிகப் பெரிய விருதுகளை இதுவரை வாங்காத ரஜினிகாந்துக்கு அவருடைய ரசிகர்களே பெரிய விருதுகள் என்பது சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் ஒலி,ஒளிக்கப் போகிறது. 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions