ரஜினியுடன் இணைந்து தமிழ் படத்தில் நடிக்க ஆசை – ஆமிர்கான்!

Bookmark and Share

ரஜினியுடன் இணைந்து தமிழ் படத்தில் நடிக்க ஆசை – ஆமிர்கான்!

‘டாரே ஜமீன் பார்’, ‘3 இடியாட்ஸ்’ மற்றும் ‘பி கே’ போன்ற திரைப்படங்கள் யாவும், மொழி என்ற ஒன்றை தாண்டி, எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கொள்ளை அடித்து சென்றது…..அதுமட்டுமன்றி, ஆங்கில திரையுலகினரின் கவனத்தையும் அதிகளவில் ஈர்த்த பெருமை இந்த திரைப்படங்களுக்கு உண்டு…..இவை அனைத்திற்கும் ஆணி வேர் – ஒரு பெயர் – அமீர் கான்.

தற்போது இவர் தயாரித்து, நடித்து இருக்கும் ‘யுத்தம்’ (தங்கல்) திரைப்படம் வருகின்ற டிசம்பர் 23 ஆம் தேதி வெளியாவதை ஒட்டி, இந்த திரைப்படத்தை வரவேற்க ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் ஆவலோடு காத்து கொண்டிருக்கின்றனர்….அமீர் கான் – கிரண் ராவ் – சித்தார்த் ராய் கப்பூர் தயாரித்து, UTV மோஷன் பிச்சர்ஸ் வெளியிடும் ‘யுத்தம்’ (தங்கல்) திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் நிதேஷ் திவாரி.

அமீர் கான் – சாக்ஷி தன்வர் – பாத்திமா சனா ஷாயிக் – சான்யா மல்ஹோத்ரா – சாய்ரா வசிம் – சுஹானி பட்னாகர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘யுத்தம்’ (தங்கல்) திரைப்படத்தில், தலைச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களான ஒளிப்பதிவாளர் சேட்டு, இசையமைப்பாளர் பிரீத்தம் மற்றும் படத்தொகுப்பாளர் பல்லு சலுஜா பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

“அன்பிலும், அரவணைப்பிலும் உருவாகி இருக்கிறது எங்களின் ‘யுத்தம்’ (தங்கல்) . ஆண் – பெண் இருவருமே சமம் என்பது தான் ‘யுத்தம்’ (தங்கல்) படத்தின் கதை கரு.
நம் இந்திய நாட்டில் ஏராளமான, திறமை வாய்ந்த விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள்….அவர்களுக்கு ஈடு இணையாக, எந்த விதத்திலும் குறைவின்றி விளையாட்டு வீராங்கனைகள் உதயமாக வேண்டும்…..உதயமாவார்கள்…. விளையாட்டு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ‘யுத்தம்’ (தங்கல்) போன்ற திரைப்படங்கள் அவர்களின் உள்ளத்தில் விதைக்கும்….’டாரே ஜமீன் பார்’ – ‘3 இடியாட்ஸ்’ போன்ற தரமான திரைப்படங்களின் வரிசையில் ‘யுத்தம்’ (தங்கல்) திரைப்படமும் இடம்பெறும்…..
‘யுத்தம்’ (தங்கல்) படத்திற்காக கடினமாக உழைத்த இந்த பெண்களோடு இணைந்து பணியாற்றியது எனக்கு புதுவித அனுபவத்தை கொடுத்து இருக்கிறது….அவர்களிடம் இருந்து நான் ஏராளமானவற்றை கற்று கொண்டேன் என்பது தான் உண்மை. இந்த இளம் வயதில் இந்த பெண்கள் நடிப்பில் சோபிப்பதை பார்க்கும் போது என்னுடைய 27 வருட அனுபவம் சிறியது ஆகி விடுகிறது…..என்னுடைய மகள் ‘அய்ரா’ ஒரு கால்பந்து வீராங்கனை என்பதை தற்போது நினைக்கும் போது பெருமையாக இருக்கின்றது…..என் மகள் என்னை போல நடிப்பில் ஆர்வம் கொண்டு, திரையுலகில் கால் பதித்தால், நான் மேலும் மகிழ்ச்சி அடைவேன்….


Post your comment





Related News
ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!
விஜய்யுடன் நடனமாடிய நடிகை, இரண்டு வாரமாக கோமாவில் இருந்த பரிதாபம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions