முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்

Bookmark and Share

முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்

கமல்ஹாசனுக்கு இணையதள ரசிகர்கள் இருப்பது மிகக்குறைவு தான். அஜித் விஜய் ரசிகர்கள் தான் பெரும்பாலும் ரஜினி, கமலுக்கு சப்போர்ட் செய்துவருகின்றனர். இந்நிலையில் இவர் நடித்த தூங்காவனம் பட டிரைலர் வெளியான போது சிறிது நேரம் டிரண்டிங்கில் இருந்தது.

பிறகு கபாலி ஃபர்ஸ்ட் லுக் வந்ததும் தூங்காவனம் இருந்த இடம் தெரியாமல் போனது. எங்கு பார்த்தாலும் கபாலி ஜாலம் தான். இது கமலுக்கே சற்று வருத்தத்தை கொடுத்தது.

இந்தமுறை கமல் இணையதளத்தை மட்டும் நம்பாமல் தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் சுமார் 100 திரையரங்குகளில் தூங்காவனத்தின் பாடலை நேரலையாக வெளியிட்டார்.

என்னதான் புதுமை புகுத்தினாலும், இந்த விஷயம் மக்களிடம் சென்றடைவதற்குள் அஜித்தின் வேதாளம் டீசர் வெளியானது. சொல்லவா வேண்டும்… அஜித் ரசிகர்கள் அதை கொண்டாடுவதற்கும், விஜய் ரசிகர்கள் அதை கலாய்ப்பதற்கும் சென்றுவிட்டனர். கமலில் தூங்காவனம் ஒரே அடியாக தூங்கிவிட்டது.

படம் வெளியாகும் போதாவது போட்டியில்லாமல் இருக்குமா? அல்லது இரவோடு இரவாக போட்டிக்கு வேறு ஒரு பெரிய படம் ரிலீஸ் ஆகுமா? என கமல் ஆடிப்போய்விட்டதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியது - இந்தியன் தாத்தாவாக களம்கண்ட கமல்ஹாசன்
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions