“ரஜினி அல்லது அஜித் நடித்தால் தான் எடுபடும்” - சித்திக் ஓபன் டாக்...!

Bookmark and Share

“ரஜினி அல்லது அஜித் நடித்தால் தான் எடுபடும்” - சித்திக் ஓபன் டாக்...!

சினிமாவுக்குள் நுழையும்போதே வரம் வாங்கி வந்தவர் மலையாள இயக்குனர் சித்திக். ஆம்.. ரீமேக் வரம். மலையாளத்தில் இவர் எடுக்கும் படங்கள் இந்தி உட்பட தென்னிந்திய மொழிகளில் ரீமேக்காகி அங்கேயும் கல்லா கட்டுவது வழக்கமான ஒன்று.

அதனால் தான் சித்திக்கின் படம் ரிலீசாவதை மலையாள திரையுலகை விட மற்ற மொழிகளில் உள்ள நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக இவரது பாடிகார்டு படம் தமிழ் உட்பட நான்கு மொழிகளில் ரீமேக்காகி பட்டையை கிளப்பியது.

கடந்த ஏப்ரலில் சித்திக் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படமும் ஹிட்டாக, இந்தப்படத்திற்கும் வழக்கம்போல ரீமேக் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

இந்தியில் அக்சய் குமாரும், தெலுங்கி வெங்கடேஷும் ரீமேக் ரைட்ஸ் கேட்டு அப்ளிகேசன் போட்டுவிட்டு, டென்சனுடன் நகத்தை கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இன்னும் இது குறித்து முடிவெடுக்காத சித்தக், ரீமேக்கையும் தானே இயக்கும் முடிவில் உறுதியாக இருக்கிறாராம். அப்படியானால் தமிழில் கதாநாயகனாக யார் நடிப்பார்கள் என்கிற கேள்வி எழத்தானே செய்யும்.?

ஆனால் அந்த விஷயத்தில் சித்திக் தெளிவாக இருக்கிறார். இந்தக்கதையில் ரஜினி அல்லது அஜித் நடித்தால் மட்டுமே சரியானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் சித்திக். ரஜினி நடிக்கிறாரோ இல்லையோ அஜித்தின் 57வது படத்தை சித்திக் இயக்கவுள்ளதாக ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருப்பதால், அஜித் நடிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.


Post your comment





Related News
கோட் போடவும், தைரியமா பேசவும் சூப்பர்ஸ்டாரும், தலயும் தான் காரணம் - சிம்பு ஓபன்டாக்
ரஜினியை தவிர யாராலும் விஜய்யை முந்த முடியாது; அஜித்துக்கு சவாலா?
ரஜினி இடம் எனக்கு வேண்டாம் – அஜித் அதிரடி!
ரஜினி, அஜித்துக்கு பிறகு ராம்கிதான் – ராதாரவி பாராட்டு!
ரஜினியை தொடர்ந்து அஜித்தை கவர்ந்த படம்!
ரஜினி ஹீரோ, அஜித் வில்லன் – இளம் இயக்குனரின் ஆசை!
அஜித் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டாரின் கபாலி!
ரஜினியை தாண்டி எம்.ஜி.ஆர் இடத்தில் அஜித்- கிளம்பிய சர்ச்சை
முன்பு ரஜினி… இப்போ அஜித்… ஆடிப்போன கமல்
அண்ணன் ரஜினி பக்கம், தம்பி அஜித் பக்கம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions