இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர் ரஜினி - அனுஷ்கா!

Bookmark and Share

இந்திய சினிமாவின் பெருமைக்குரியவர் ரஜினி - அனுஷ்கா!

'அருந்ததீ' படத்தின் மூலம் பிரபலமான அனுஷ்கா, தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட படம் பாகுபலி.

இந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் படம் பாகுபலி. ராஜமெளலி இயக்கியுள்ள இப்படம் சுமார் ரூ.250 கோடியில் இரண்டு பாகங்களாக வெளிவர வருகிறது.

சமீபத்தில் இப்படத்தில் நடித்த பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா மற்றும் ராணா ஆகியோர் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது அனுஷ்கா, பாகுபலி படத்தை முதலில் ரஜினிக்கு தான் திரையிட்டு காட்ட வேண்டும் என்று கூறினார்.

 ஏன்.? எதற்காக.? என்பதற்கு அனுஷ்கா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது... இந்திய சினிமாவின் மிகவும் பெருமைக்குரியவர் ரஜினி. இந்திய சினிமா படங்களின் வியாபாரத்தை உலகளவில் விரிவுப்படுத்தியவர் அவர் தான்.

இந்திய சினிமாவின் லெஜெண்ட் அவர் தான். எனவே தான் பிரமாண்ட படமான பாகுபலி படத்தை ரஜினிக்கு முதலில் திரையிட்டு காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions