ரஜினியுடன் இணையும் அர்னால்ட்

Bookmark and Share

ரஜினியுடன் இணையும் அர்னால்ட்

ரஜினிகாந்த் தற்போது  மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து கொண்டிருக்கிறார்  என்பது ஏற்கனவே அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ஷங்கரின் 'எந்திரன் 2' படத்தில் நடிக்கவுள்ளார்.

முதல் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக ரஜினியே நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும், தற்போது இந்த கேரக்டருக்கு அர்னால்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'ஐ' படத்தின் இசை வெளியீட்டின்போது கிடைத்த அறிமுகத்தை வைத்து ஷங்கர், அர்னால்டு அவர்களை தொடர்பு கொண்டு 'எந்திரன் 2' படத்தின் கதையை கூறியுள்ளதாகவும், ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க அர்னால்டு ஒப்புக்கொண்டு 25 நாட்கள் கால்ஷீட் கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இந்த படம் இவ்வருட இறுதியில் தொடங்கும் என்றும் இந்த படம்தான் இந்தியாவிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாரான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions