மீண்டும் களை கட்டிய பாட்ஷா… அத்தனை அரங்குகளும் ஹவுஸ்ஃபுல்!

Bookmark and Share

மீண்டும் களை கட்டிய பாட்ஷா… அத்தனை அரங்குகளும் ஹவுஸ்ஃபுல்!

டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் ‘பாட்ஷா’ படத்திற்காக மீண்டும் ரசிகர்களாக மாறி இருக்கும் திரையுலக நட்சத்திரங்கள் “ஜாக்கிச் சானின் படங்களுக்கு இருக்கும் வரவேற்பை விட இந்த டிஜிட்டல் பாட்ஷாவிற்கு வரவேற்பு அமோகமாக இருக்கின்றது” என்று கூறுகிறார்.

லதா ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், பெருமைக்குரிய தயாரிப்பு நிறுவனமாகவும் கருதப்படும் ‘சத்யா மூவிஸ்’ நிறுவனம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாட்ஷா’ படத்தை, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றி, மார்ச் 3 ஆம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களிலும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ‘பாட்ஷா’, திரையுலக நட்சத்திரங்களையும் அதிகளவில் கவர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

லட்சுமி நாராயணனின் 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில் நுட்ப வேலைப்பாடுகளும், டிஜிட்டல் பதிப்பில் உருவாகி இருக்கும் ‘பாட்ஷா’ படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது என்பதை உறுதியாகவே சொல்லலாம்.

இயக்குநர் பாலாஜி மோகன் கூறியதாவது: “இது எனக்கு ஒரு உணர்ச்சிகரமான தருணம். பாட்ஷா படத்தை கடந்த 1995 ஆம் ஆண்டு என்னுடைய பெற்றோர்களுடன் இணைந்து பார்த்த போது எனக்கு வயது 8. தற்போது மீண்டும் அவர்களோடு இணைந்து இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது”

இசையமைப்பாளர் அனிரூத் கூறியதாவது: “நம் வாழ்க்கையில் இதுவரை எவரும் கண்டிராத திரையரங்க அனுபவத்தை நமக்கு தருகின்ற திரைப்படம் இந்த டிஜிட்டல் பாட்ஷா”

நடிகர் தனுஷ் கூறியதாவது: “22 வருடங்களுக்கு முன் என்ன உற்சாகம் இருந்ததோ, அதே தான் இப்போதும் இருக்கின்றது. “நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்.. மீண்டும் ஒரு முறை தலைவரை காண இருக்கின்றோம்”


Post your comment

Related News
விலகிய இயக்குநர், ராக்கெட்ரி படத்தை இயக்கி, நடிக்கும் மாதவன்
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
மாரத்தான் போட்டியில் ஓடிய காஜல் அகர்வால்
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
பிரபல பாலிவுட் நடிகரை இயக்கும் ராகவா லாரன்ஸ்
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
நடிகை ரித்விகாவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions