பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை! - ரஜினி அதிரடி

Bookmark and Share

பாட்ஷாவை மிஞ்ச எந்தப் படமும் இல்லை! - ரஜினி அதிரடி

தயாரிப்பாளரும் முன்னாள்அமைச்சருமான ஆர் எம் வீரப்பனின் 90-வது பிறந்த நாள் விழா சென்னை ராணி சீதை அரங்கில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக ரஜினி கலந்து கொண்டார். 

விழாவில் ரஜினி பேசுகையில், “ஆர்எம் வீரப்பன் தயாரித்த பாட்ஷா படத்தோட 125 வது நாள் விழாவில் கலந்து கொண்டேன். அப்போது ஆர்எம்வீ  அமைச்சராக இருந்தார்.

அந்த மேடையில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றிப் பேசினேன். அன்று இரவே ஆர்எம்வீக்கு பதவி போய்விட்டது. அடுத்த நாள் விஷயம் தெரிஞ்சு, கொஞ்சம் பயத்தோடதான் அவருக்குப் போன் பண்ணேன். வருத்தத்தை தெரிவித்தேன், அவர் சிரித்து கொண்டே வருத்தப்படாதீங்க.. இது காலத்தின் கட்டாயம்- என்று சொன்னார். 

ஆர்எம் வீரப்பன் சார் ஒரு முறை கூட ஆஸ்பிடலுக்கு போனதே இல்லைனு சொல்லுவாங்க. ஆஸ்பிடலுக்குப் போன வேதனையை அனுபவிச்சவன் நான். தயவு செய்து யாரும் ஆஸ்பிடலுக்கு போகாத அளவுக்கு உடம்பை வச்சிக்கங்க. 

50 வயசுக்கு மேல இருக்கிறவங்க தினமும் உடற்பயிற்சி செய்யுங்க. என்னிடம் பலர் இப்போது நான் நடிக்கிற கபாலி படம், பாட்ஷாவை மிஞ்சுமான்னு கேட்கிறார்கள், பாட்ஷாவை மிஞ்சும் அளவுக்கு இன்னொரு படம் வருமான்னு தெரியல, எப்பவும் ஒரு பாட்ஷாதான். கபாலி பாட்ஷா போன்று இருக்காது” இவ்வாறு ரஜினி பேசினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions