ரஜினிகாந்துக்கு மலேசிய டத்தோ விருது?

Bookmark and Share

ரஜினிகாந்துக்கு மலேசிய டத்தோ விருது?

ரஜினிக்கு மலேசிய அரசின் உயரிய விருதான ‘டத்தோ’ விருது வழங்க வேண்டும் என்று அந்நாட்டு ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள். இந்த விருது சமூக சேவையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே ஹாலிவுட்டில் நடிகர் ஜாக்கிசான், நடிகை மிச்செல்லியோ, இந்தி நடிகர் ஷாருக்கான் போன்றோர் இவ்விருதை பெற்று இருக்கிறார்கள்.

ரஜினிகாந்துக்கும் டத்தோ விருது வழங்க வேண்டும் என்று மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் வற்புறுத்தி உள்ளனர். இந்த விருது பெறுவதற்கு அவர் தகுதியானவராக இருக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் ரஜினி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். அவரது படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் ஏற்பட்டு உள்ளது.

அனைத்து நாடுகளிலும் ரஜினி படங்கள் வெற்றிகரமாக ஓடுகின்றன. ஜப்பானியர்கள் ரஜினிக்கு ரசிகர் மன்றமே துவங்கி இருக்கிறார்கள். ரஜினி படம் ரிலீசாகும் போதெல்லாம் ஜப்பானிய ரசிகர்கள் சென்னை வந்து அவரது படத்தை பார்க்கின்றனர். மலேசியாவிலும் ரஜினிக்கு பெரிய ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

எனவே அவருக்கு டத்தோ விருது வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி ரசிகர்கள் கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளனர். விரைவில் இதனை ‘ஆன்லைன்’ மூலம் மலேசிய அரசுக்கு அனுப்பி வைக்க இருக்கிறார்கள்.


Post your comment





Related News
விருது விழாவில் அஜித் செய்த செயல், என்ன மனுஷன் அவர் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
பிலிம்பேர் 2017 - விருது வென்றவர்கள் முழு விவரம்
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
IIFA Utsavam 2017- விருது வென்றவர்களின் முழு விவரம்
சூர்யாவிற்கு விருது ! எதற்கு தெரியுமா
IIFA South Utsavam விருது 2017- விருதுக்கு தேர்வானவர்களின் விவரம்
ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு
ஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி
பிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ
ஆசியா விஷன் திரைப்பட விருதுகளை அள்ளிய தர்மதுரை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions