அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?

Bookmark and Share

அனிருத், தனுஷை சேர்த்து வைக்கப் பார்க்கிறாரா ரஜினிகாந்த்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு திடீர் என்று சென்றுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கபாலி ஹிட் படத்தை அடுத்து ரஞ்சித், ரஜினி மீண்டும் இணையும் படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சித் படத்தில் நடிக்க உள்ள நிலையில் ரஜினி இசையமைப்பாளர் அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு சென்றுள்ளார். அப்போது அனிருத் ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ரஜினி, ரஞ்சித் இணையும் படத்திற்கு அனிருத் இசையமைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் ரஜினி அனிருத்தின் ஸ்டுடியோவுக்கு சென்றார் என்ற பேச்சும் உள்ளது.

ஒரு காலத்தில் ஓவர் நெருக்கமாக இருந்த தனுஷும், அனிருத்தும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் இந்த படம் மூலம் அவர்கள் மீண்டும் சேர்வார்களா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.


Post your comment





Related News
காலா இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய விநியோகஸ்தர்
காலா டீஸர் தள்ளி வைப்பு, காரணம் என்ன? - அதிர்ச்சி தகவலை வெளியிட்ட தனுஷ்.!
மாமா ரஜினி அவ்வளவு சொல்லியும் பேச்சை கேட்காத தனுஷ்?
அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை
மாமனார் ரஜினியை முந்திய மருமகன் தனுஷ்!
விஜய்யிடம் நிறைய கருப்பு பணம் உள்ளது – கிளம்பிய சர்ச்சை!
தனுஷ் – சௌந்தர்யா படத்தின் பெயர் இதுவா?
தனுஷுடன் இணையும் சௌந்தர்யா ரஜினிகாந்த்
ரஜினி பட டைட்டீல்களை கைப்பற்றும் தனுஷ்!
ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் கால்பந்து சீசன் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions