எந்திரன்2 படத்தில் ஒரேயொரு பாட்டுதானா?

Bookmark and Share

எந்திரன்2 படத்தில் ஒரேயொரு பாட்டுதானா?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிவரும் படம் 2ஓ. படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகிவரும் இப்படம் 2017ல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் இரண்டு வெர்ஷனாக வரும் எனவும் ஒரு படம் ஹாலிவுட் பாணியில் பாடல்கள், மசாலா காட்சிகள் இல்லாமலும், மற்றொன்று ஷங்கருக்கே உரிய அடையாளத்தோடு பிரம்மாண்ட செட்டுகளில் அமைந்த பாடல் காட்சிகளுடன் வரும் எனவும் சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தற்போது மற்றொரு செய்தியாக படத்தில் மொத்தமே ஒரு பாடல்தான் என செய்திகள் வெளியாக, அதற்கு பதிலளித்துள்ளார் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான ராஜு மகாலிங்கம்.

‘ஏ.ஆர்.ரகுமான் மாதிரி ஒரு மியூசிக் டைரக்டரை வச்சிக்கிட்டு, ஒரு பாட்டு மட்டும் படத்துல வக்கிற அளவுக்கு நாங்க வெவரம் இல்லாதவங்களா? ஆடியோ ரிலீஸ் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. கேக்குறவங்க ஆடிப்போற அளவுக்கு அத்தனை பாட்டுகள் இருக்கு, இசை வெளியீட்டு விழா லண்டனில் நடக்கும் என அறிவித்துள்ளார்.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions