ரஜினி என் கதையில் நடிக்க மறுத்து விட்டார்- கவுதம் மேனன்!

Bookmark and Share

ரஜினி என் கதையில் நடிக்க மறுத்து விட்டார்- கவுதம் மேனன்!

தமிழ் சினிமாவில், ஸ்டைலிஷ் இயக்குனர் என்றால் அது கவுதம் மேனன் தான். அமைதி மையமாக இருந்தாலும், அதிரடி படங்களை கொடுப்பவர். இயக்குனர், தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு, விரைவில் இசையமைப்பாளராகவும் மாறவுள்ளார்.

என்னை அறிந்தாலுக்கு பிறகு சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் கவுதம். இதையடுத்து யாரை வைத்து படம் இயக்க ஆசை என்று கேட்டால் அவர், “என் சாய்ஸ் ரஜினி சார். இதுவரை யாரிடமும் சொன்னதில்லை. 

சமீபத்தில், அவரிடம் போய், காலை நேரத்தில் கதை சொன்னேன். ஒரு மணி நேரத்தில், நான் தான் அடுத்த கதை பண்ண போறேன், ரஜினி சார் நடிக்க போறார் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால், அன்று மாலையே, இந்த படம் பண்ணல, வேற படம் பண்ண போறார்னு சொன்னாங்க. அந்த ஒரு நாள், அவ்வளவு பரபரப்பான நாளாக இருந்தது. நல்ல வேளை, இந்த விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. 

சந்தோஷமா கதை கேட்டார், எப்போது சூட்டிங் போகலாம் என்றெல்லாம் பேசினார். ஆனால், அதன் பின் என்ன நடந்தது என்று தெரியவில்லை; 15 ஆண்டு சினிமா பயணத்தில், அந்த ஒரு நாள் மறக்க முடியாத அனுபவம்” என்று தன் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார். 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions