இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?

Bookmark and Share

இலங்கை செல்ல ரஜினியை தடுத்த அரசியல்வாதிகள் இப்போது இந்த இசையமைப்பாளரை தடுப்பார்களா?

இலங்கையில் லைகா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளை மக்களிடம் அளிக்க ரஜினி அங்கு செல்ல இருப்பதாக செய்திகள் வந்தன. இதனை அரிந்ந சில அரசியல்வாதிகள் ரஜினி இலங்கைக்கு போகக்கூடாது என்று பெரிய பிரச்சனையை செய்தனர்.

இதனால் ரஜினியும் தற்போது நடக்கும் நிகழ்ச்சிக்கு தான் போகவில்லை என்றும், ஆனால் இனி வரும் காலங்களில் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் என்னை யாரும் தடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் ஜூன் மாதம் இசைஞானி இளையராஜாவின் மேடைக்கச்சேரி ஒன்று நடைபெறவுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இசைஞானி ஒப்புக்கொண்டிருப்பதாகவும், இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதுவும் இந்த நிகழ்ச்சியை நடத்துவது இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர் என்றும் கூறப்படுகிறது.

ரஜினியின் பயணத்தை நிறுத்தியவர்கள் இளையராஜாவையும் தடுப்பார்களா அல்லது பின் வாங்குவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions