ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்

Bookmark and Share

ரஜினிக்கு இப்படித்தான் இருக்கும்! அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட பிரபல ஜோதிடர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அடுத்தடுத்து படத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் அவரின் அரசியல் விஜயம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது. அவரின் அரசியல் பணிகள் அமைதியாக நடந்து வந்துகொண்டிருந்தாலும் அவர் வருவது எந்தளவிற்கு உறுதி என்பது மக்கள் மத்தியில் இன்னும் கேள்வியாகவே உள்ளது.

அண்மையில் வந்த காலா படமும் அவருக்கு கொஞ்சம் சறுக்கலை தந்தது. படத்திற்கு நல்ல விமர்சனங்கள் இருந்தாலும் நஷ்டம் தான். கடந்த வருடம் அவர் சொன்னது போல நடந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இந்நிலையில் அவர் தற்போது ஜாதக கால நிலவரம் பற்றி பிரபல ஜோதிடர் பண்டித் வெற்றி வேல் கணித்து கூறியுள்ளார். இதில் வரும் 2020 வரை ரஜினிக்கு நன்மை இல்லாத அமைப்பாக இருக்கிறது.

அதனால் அவர் நல்ல கருத்துள்ள படமாக நடித்து வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஆனால் கமர்சியல் அளவில் படங்கள் நடித்தால் அது கைகொடுக்காது. மேலும் சினிமாவில் இந்த நேரத்தில் அவருக்கு சிறப்பாக இருக்காது.

அப்படி சென்றால் இவருக்கும் சங்கடம், படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கும் சங்கடம் தான். இக்காலகட்டத்தில் அவர் தன் உடல் நலம் சார்ந்த விசயங்களை கவனத்தில் கொண்டு அதை பேணி காத்தால் நன்மை தரும்.

மேலும் 2021 க்கு மேல் அரசியல் அவர் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார். அவருக்கு யோகமான ஜாதகம் தான். அரசியலுக்கான் தகுதியும் உள்ளது என தெரிவித்துள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions