சென்னையில் தொடங்கியது ரஜினியின் கபாலி படப்பிடிப்பு!

Bookmark and Share

சென்னையில் தொடங்கியது ரஜினியின் கபாலி படப்பிடிப்பு!

ரஜினியின் புதிய படமான ‘கபாலி’ ரசிகர்களிடம் பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், தன்ஷிகா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

‘கபாலி’ படத்துக்காக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஸ்டூடியோக்களில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று சென்னையில் உள்ள ஒரு அரங்கில் படப்பிடிப்பு தொடங்கியது. சரியாக காலை 9.05 மணிக்கு ‘கபாலி’ பட பூஜை நடந்தது. இதில் ரஜினி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பூஜை முடிந்து தீபாராதனை காட்டியதும், ரஜினி அங்கு தட்டில் வைக்கபட்டிருந்த இனிப்பை எடுத்து தயாரிப்பாளர் தாணு, டைரக்டர் ரஞ்சித் ஆகியோருக்கு ஊட்டி விட்டார். இதையடுத்து, படப்பிடிப்பு தொடங்கியது.

முதலில் ரஜினி வெள்ளைத்தாடியுடன் கோர்ட்–சூட் அணிந்து ஸ்டைலாக நடந்து வந்த காட்சி படமாக்கப்பட்டது. முதல் ‘ஷாட்’ முடிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ‘கபாலி’ படத்தில் ரஜினி தாதாவாக நடிக்கிறார். அது தொடர்பான காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

சென்னையில் தொடர்ந்து 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. முதலில் ரஜினி தொடர்பான காட்சிகளும், பின்னர் ராதிகா ஆப்தே மற்றும் நடிகர், நடிகைகள் பங்கேற்கும் காட்சிகளும் படமாக்கப்படுகின்றன.

சென்னையில் ‘சூட்டிங்’ முடிந்ததும் படப்பிடிப்பு குழுவினர் மலேசியா செல்லுகிறார்கள். ‘கபாலி’ படப்பிடிப்பு எங்கு நடைபெறும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் கதை வெளியாகி விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு குழுவினருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் கொண்டு போகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘கபாலி’ படப்பிடிப்பை விரைவாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
வசூலை வாரி குவித்த டாப்-1௦ தென்னிந்திய திரைப்படங்கள் இவை தான் – அதிர வைக்கும் வசூல் விவரங்கள் உள்ளே.!
மீண்டும் அடுத்த லெவலுக்கு செல்லும் ரஜினியின் படம்
கபாலி உண்மையான வசூல் இதுதான்! தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்
பல ஆண்டுகளுக்குப் பிறகு 200 நாள் காணும் தமிழ்ப் படம் ரஜினியின் கபாலி!
அடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்
ரஜினியை மீண்டும் இன்று சந்தித்த கபாலி இயக்குனர் - நடந்தது என்ன ?
நாளை கபாலி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல் ரிலீஸ்!
கபாலியின் வசூல் பொய்யா? உண்மை வசூல் இவ்வளவு தானா?
சௌந்தர்யாவின் அடுத்த படத்தில் உள்ள கபாலி கனக்ஷன்!
இணையதளத்தில் லைவ் அப்டேட் ஆன கபாலி: கடுப்பான சௌந்தர்யா ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions