பிரதமரிடம் ஒரு கோடி ருபாய் வழங்க வேண்டும்- நதிநீர் இணைப்பு சங்கம்!

Bookmark and Share

பிரதமரிடம் ஒரு கோடி ருபாய் வழங்க வேண்டும்- நதிநீர் இணைப்பு சங்கம்!

நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரஜினி ஒரு மாதத்திற்குள் ஒரு கோடி ரூபாயை பிரதமர் மோடியிடம் வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும்போது;- பா.ஜ. காஆட்சிக்கு வந்தால் நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மோடி கூறினார். ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் ஆகியும், இந்த திட்டத்தை துவங்கவில்லை.நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் தன் பங்காக ஒரு கோடி ருபாய் தருவதாக ரஜினி கூறியிருந்தார்.

அவர் விவசாயிகளின் நல்லெண்ண தூதுவராக சென்று ஒரு மாதத்திற்குள் பிரதமர் மோடியை சந்தித்து ஒரு கோடி ரூபாயை வழங்க வேண்டும். அவர் வழங்காவிட்டால் அவர் வீட்டின் முன் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என கூறிவுள்ளார்.

மேலும் தேசிய தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்கத்தை சேர்ந்த 30 விவசாயிகள் ரஜினியை காண அவர் வீட்டுக்கு சென்றனர். அப்போது போலீசார் தடுத்த போது சட்டையை கிழித்து எரித்து விட்டு சாலையில் போராடுவோம் என்று கூறவே அனுமதி அளித்தனர். உள்ளே சென்று ரஜினி இல்லாததால் அவரது உதவியாளரிடம் கடிதத்தை கொடுத்தனர்.

 


Post your comment





Related News
ரஜினியின் பேட்ட பொங்கலுக்கு ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தெரியாமல் இருக்க நான் முட்டாள் இல்லை - ரஜினிகாந்த்
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions