தாணுவுடன் ரஜினி இணைந்த பின்னணி!

Bookmark and Share

தாணுவுடன் ரஜினி இணைந்த பின்னணி!

ஒரு வழியாக ரஜினியின் அடுத்தபடத்தைக் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் மெட்ராஸ் ரஞ்சித் இயக்குவது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. எப்போதும் இவ்வளவு முன்னதாக ரஜினி படம் அறிவிப்பு வெளியாகாது.

பூஜை போடப்பட்டு அன்றே அப்போதே படப்பிடிப்பு தொடங்கப்பட்டுதான்  நடக்கும்.  ஆகஸ்ட் மாதப் படப்பிடிப்புக்கு இப்போதே அறிவிக்க  காரணம் என்ன என்று பரவலாகப் பேச்சு அடிபடுகிறது.

லிங்கா விநியோகஸ்தர்கள் பிரச்சினையில் ரஜினியின் பெயர் பெரிதும் சர்ச்சைக் குள்ளாக்கப்பட்டது. வியாபார விவகாரங்களுக்கு தன் இமேஜை களங்கப்படுத்தியது ரஜினியை பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது.

விநியோகஸ்தர்கள் மீண்டும் பிரச்சினையை எழுப்புவதாக வேறு கூறி வருகிறார்கள்.  இந்நிலையில் அவர்களைச் சமாளிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக இருக்கும் எஸ்.தாணுவுக்கே நடித்துக் கொடுப்பது பல சிக்கல்களிலிருந்து தவிர்க்கவும் தப்பிக்கவும் வசதியாக இருக்கும் என்று ரஜினி முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

அது மட்டுமல்ல யாரிடமும் முன்பணமோ ஒப்பந்தமோ எதுவுமின்றி சுயமாக செலவு செய்து படமெடுப்பவருக்கே முன்னுரிமை தந்துள்ளாராம்.

அது தவிர தன் பட வியாபாரம் தன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தக் கூடாது என்று தெளிவாக முடிவெடுத்து தான் ஒரு நடிகர் என்று மட்டுமே ஒப்புக் கொண்டுள்ளதாக பேசப்படுகிறது. விநியோக அனுபவமும் பெற்றுள்ளதால் கூடுதல் அனுகூலம் கருதியே தாணுவுக்கு நடிக்க சம்மதித்ததாகவும் கூறுகிறார்கள்.


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்
சமந்தா நடிக்க தடையா?
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions