கமலின் முடிவால் தகர்ந்த ரசிகர்களின் கனவு

Bookmark and Share

கமலின் முடிவால் தகர்ந்த ரசிகர்களின் கனவு

ஷங்கர் இயக்கத்தி்ல், ரஜினி நடிக்கும் படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க கமல் மறுப்பு தெரிவித்துள்ளார். கமல் மற்றும் ரஜினி மீண்டும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் நிறைவேறாத கனவாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கிறார் என்ற தகவல், இருதரப்பு ரசிகர்களையும் பெரும்மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இந்த படத்தில், ரஜினி முன்னணி கேரக்டரிலும், கமல் வில்லன் கேரக்டரிலும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உத்தமபுத்திரன், விஸ்வரூபம் 2 மற்றும் பாபநாசம் படங்கள் வெளியாக தயாராக உள்ள நிலையில், அடுத்த படத்தின் வேலைகளையும் கமல் துவக்கிவிட்டார். வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ள இந்த படத்தின் காரணமாக, ஷங்கர் படத்தில் நடிக்க இயலாத சூழ்நிலை உள்ளதாக கமல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கமல், இயக்குனர் ஷங்கரிடம், நேரடியாக இதை கூறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக, ஒரே படத்தில் ரஜினி, கமலை காணலாம் என்ற ரசிகர்களின் கனவு, நிறைவேறாத கனவாகவே தொடர்ந்து நீடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ரஜினி மற்றும் கமல் இருவரும் இணைந்து, 16 வயதினிலே, மூன்று முடிச்சு உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
கருணாநிதி உடல்நலம் பற்றி மு.க.ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் விஜய் ஆண்டனி
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions