இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்

Bookmark and Share

இன்றைக்கும் ரஜினியும் கமலும் சுற்றி இளைஞர்கள் பட்டாளமுள்ளது - பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் இளைய தலைமுறையை பற்றியும் தன் சினிமா பயணத்தை பற்றியும் அளித்த பேட்டியில் ‘‘இளைய தலைமுறை இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்களோடு படங்கள் பண்ண ரஜினி, கமல் இறங்கி வந்திருக்காங்க.

அதுதானே அழகு. ராஜேஷ் என்ற இளைஞனோடு கமல் சார் வொர்க் பண்ண முடியுது. ஒரு ரஞ்சித்தோட ரஜினி சார் வொர்க பண்ண முடியுது. ரஜினியும் கமலும் இளைய தலைமுறைக்கு ஒரு உதாரணமா இருக்காங்கல.

‘கபாலி’ முதல் நாள் ஷூட்டிங்னு ஒரு போட்டோ பார்த்தேன். ‘கபாலி’ நானும் பண்ண வேண்டியது. ஆனால் நிறைய டேட்ஸ் தேவைப்பட்டுச்சு. நான் ஏற்கெனவே நிறைய படங்களை ஒப்புக்கிட்டேன். அந்தப் படத்தை மிஸ் பண்ணினதுக்கு ரொம்ப வருத்தப்படுறேன். 

அந்த இளைஞர் கூட்டத்தை பார்த்தப்ப அந்த வருத்தம் இன்னும் அதிகமானது என்பது உண்மை. அவரை சுத்தி இருக்கும் அந்தப் பட்டாளத்தைப் பார்க்கும்போது தமிழநாட்டின் திறமைசாலி இளைஞர்களைப் பார்க்கும்போது அவங்க யாருமே ஷோவா இல்லை, வழக்கமான சினிமா முகமா இல்லை.

ஜெயிச்சவங்க அல்ல. பசியோட இருக்கிற ஒரு கும்பல். ரஜினிக்கு தெரியாத விஷயமா.

நம்பி முடிவெடுக்கிறார்னா அவர் உணர்ந்திருக்கார். கமல் சார், ரஜினி சார் அவங்களே உணர்ந்திருக்காங்கன்னா, அந்த அனுபவம் அழகுன்னுதானே அர்த்தம்.’’ என்று ஒரு புன்னகை வருத்ததுடன் கூறினார் பிரகாஷ்ராஜ்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions