உங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனர் இயக்கத்தில் அதிக படம் நடித்துள்ளார்கள் தெரியுமா?

Bookmark and Share

உங்கள் பேவரட் நடிகர்கள் எந்த இயக்குனர் இயக்கத்தில் அதிக படம் நடித்துள்ளார்கள் தெரியுமா?

தமிழ் சினிமாவில் பேவரட் கூட்டணி ஒன்று இருக்கும். அந்த கூட்டணி அமைந்தால் எப்போதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான், அப்படி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் எந்த வெற்றி கூட்டணியுடன் அதிக முறை இணைந்துள்ளார்கள் தெரியுமா? பார்ப்போம்.

ரஜினி-எஸ்.பி.முத்துராமன்

ரஜினிகாந்த் இன்று இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டார், ஆனால், இவரை மாஸ் கிளாஸ் என மனிதன், ஆறிலிருந்து அறுவது வரை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்தில் 20 படங்களுக்கு மேல் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன் தான்.

கமல்ஹாசன்- பாலசந்தர்

ரஜினி-கமல் என இரண்டு ஜாம்பவான்களையும் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவர் பாலசந்தர், இவர் கமல்ஹாசனுடன் மட்டுமே 25 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார்.

விஜய்-எஸ்.ஏ.சந்திரசேகர்

இளைய தளபதி விஜய்யை தன் தந்தை தான் தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும், பிறகு தன் கடின உழைப்பால் இந்த உயரத்தை அடைந்துள்ளார். தன் தந்தையின் இயக்கத்தில் மட்டும் விஜய் 9 படங்களில் நடித்துள்ளார்.

அஜித்-சரண்

அஜித் எப்போதும் இயக்குனர்களை மாற்றி, மாற்றி பணியாற்றுபவர், ஆனால், இயக்குனர் சரணுடன் மட்டுமே 4 முறை இணைந்து பணியாற்றியுள்ளார்.

சூர்யா-ஹரி

சிங்கம் சீரியஸே 3 பாகம் வர இது மட்டுமின்றி ஆறு, வேல் என ஹரியுடன் மட்டுமே சூர்யா 5 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

விக்ரம்-ஷங்கர், தரணி, விஜய், ஹரி, பாலா

விக்ரம் பெரிதும் ஒரே இயக்குனருடன் பல முறை பணி புரிந்தது இல்லை, அந்த வகையில் இயக்குனர்கள் ஷங்கர், ஹரி, தரணி, விஜய், பாலா ஆகியோருடன் மட்டுமே இரண்டு முறை பணியாற்றியுள்ளார், சாமி-2 வந்தால் ஹரி இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பார்.

தனுஷ்-செல்வராகவன், ஜவகர் மித்ரன்

தனுஷ் இயக்குனர் செல்வராகவன் மற்றும் ஜவகர் மித்ரனுடன் இணைந்து 3 படங்களில் பணியாற்றியுள்ளார்.

சிம்பு-கௌதம் மேனன்

சிம்பு ஹீரோவாக அறிமுகமாகி கௌதம் மேனன் இயக்கத்தில் மட்டுமே 2 முறை தொடர்ந்து நடித்துள்ளார், சிறு வயதில் தன் தந்தை டி.ஆர் இயக்கத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யா-விஷ்ணுவர்தன்

விஷ்ணுவர்தன் என்றாலே அவரின் கம்பெனி ஆர்டிஸ்ட் போல் ஆர்யா இருப்பார், அப்படித்தான் இவர்கள் கூட்டணியில் 5 படங்கள் வெளிவந்துள்ளது.

மாதவன்- மணிரத்னம்

மாதவனை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்த மணிரத்னம் என்பது அனைவரும் அறிந்ததே, அவரின் இயக்கத்திலேயே மாதவன் 4 படங்களில் நடித்துள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions