ரஜினியின் சூப்பர் ஹிட் பட பாணியில் உருவாகியிருக்கும் கொடி!

Bookmark and Share

ரஜினியின் சூப்பர் ஹிட் பட பாணியில் உருவாகியிருக்கும் கொடி!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் கொடி. இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. த்ரிஷா முதல்முறையாக இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் கதை சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த படையப்பா படத்தின் கதையை போலவே இருக்குமாம். ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி போன்ற பவர்ஃபுல்லான ஒரு வேடத்தில் த்ரிஷா நடித்துள்ளாராம். மேலும் ‘பிரேமம்’ புகழ் அனுபமாவும் இப்படத்தில் ஒரு நாயகியாக நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். இப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவுள்ளது. மேலும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் என தனுஷ் அறிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions