ரஜினிக்கு பணத்தாசையா? லாரன்ஸ் கருத்து

Bookmark and Share

ரஜினிக்கு பணத்தாசையா? லாரன்ஸ் கருத்து

ரஜினி இலங்கை செல்வதாக அறிவித்த உடன் பல்வேறு அரசியல் தலைவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் அவர் அந்த பயணத்தையே ரத்து செய்து விட்டார். மேலும் வருங்காலத்தில் அங்கு சென்றால் அதை அரசியலாக வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் இது பற்றி கருத்து தெரிவித்துள்ளார். "கூட 10 பேர் இருந்தால் போதும் சிலர் அரசியல் கட்சி தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் ரஜினி தனக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இருந்தும் அரசியல் ஆசை இல்லை என பலமுறை நிரூபித்துள்ளார்."

"அவர் நினைத்தால் 6 மாதத்திற்கு ஒரு படம் நடித்து அதிக பணம் சம்பாதிக்கமுடியும். ஆனால் அவர் இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படத்தில் நடிக்கிறார். அவருக்கு பணத்தாசை இல்லை என்பதை இது உறுதிசெய்கிறது."

"இந்திய பிரதமர் தமிழ்நாடு வந்தால் முதலில் பார்க்க நினைப்பது இவரைத்தான். ஆன்மீக வழியை மட்டுமே தொடரும் அவர் எந்தவித ஈகோவும் இல்லாமல் வாழ்கிறார். இது என் கருத்து மட்டுமல்ல, அவரின் கோடி கணக்கான ரசிகர்களின் கருத்து" என லாரன்ஸ் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions