முடிவுக்கு வந்தது லிங்கா பிரச்னை - ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் வாபஸ்!

Bookmark and Share

முடிவுக்கு வந்தது லிங்கா பிரச்னை - ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டம் வாபஸ்!

ரஜினி நடித்த லிங்கா படத்தால் தங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறி வந்தனர். பல போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும், ரஜினியும் சம்மதம் தெரிவித்து அந்தப் பணத்தை தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர்.

இதுதொடர்பாக தாணு வெளியிட்ட அறிக்கையில்,  லிங்கா படத்தின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ரஜினி ஒரு பெரிய தொகையை இழப்பீடாக கொடுத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் என்றார்.

ஆனாலும் கடந்த 10 நாட்களாக இந்த தொகையை தங்களுக்குள் எப்படி பிரித்துக் கொள்வது என்ற குழப்பத்தில்தான் பணத்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே வருகிற 22ம் தேதி ரஜினி வீட்டு முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்து இருந்தனர்.

ஆனால் தற்போது பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர் விநியோகஸ்தர்கள்.  இதுதொடர்பாக சிங்கார வேலன் கூறியுள்ளதாவது, லிங்கா  நஷ்டஈடு பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ரஜினி வீட்டின் முன்பு நாங்கள் அறிவித்திருந்த பிச்சை எடுக்கும் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
ரஜினி, அரசியலுக்கு வருவது உறுதி - லிங்கா தயாரிப்பாளர் பேட்டி!
எங்களுக்காக ரஜினி தயாரிப்பாளரிடம் பேச வேண்டும்! - \'விநியோகஸ்தர்கள்\'
ரஜினியை சந்திக்கப் போவதால் போலீஸ் பாதுகாப்பு கேட்கும் விநியோகஸ்தர்கள்
அமெரிக்காவில் ரஜினிக்கு பிரமாண்ட பேனர்கள்... 100 அரங்குகளில் லிங்கா பிரிமியர் ஷோ!
லிங்கா பட வழக்கு: ரஜினிகாந்துக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீசு
என் புகழுக்கு களங்கம் விளைவிக்கவே வழக்கு - ரஜினி மனு
\'என்னை விட என்னை விட அழகி உண்டு... உன்னைவிட உன்னைவிட தலைவன் இல்லை!\' - லிங்கா பாட்டு
ஸ்காட்லாந்து சுற்றுலாத்துறையை மகிழ்ச்சிப்படுத்திய லிங்கா படக்குழு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions