பார்ட் டைம் கில்லரான ரஜினிகாந்த்

Bookmark and Share

பார்ட் டைம் கில்லரான ரஜினிகாந்த்

‘மெய்ன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற (நான்தான் ரஜினிகாந்த்) பெயரில் இந்தி படத்தை மும்பையை சேர்ந்த வர்ஷா புரொடக்ஷன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில், ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரம் தரம் தாழ்ந்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதன்பிறகு வர்ஷா புரொடக்ஷன் சார்பில் ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தமாட்டோம் என்று கூறப்பட்டதையடுத்து, இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்திற்கு தற்போது ‘மெய் ஹூன் (பார்ட் டைம்) கில்லர்’ என்று பெயர் வைத்துள்ளனர். வழக்குகளில் இருந்து விடுபட்டதையடுத்து இப்படத்தை வருகிற ஏப்ரல் 24-ந் தேதி வெளியிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தை பைசல் சாயிப் என்பவர் இயக்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் வில்லனாக கலக்கும் ஆதித்யா மேனன் ஹீரோவாக நடிக்கிறார். கவிதா ராதேஷ்யம், சுனில் பால், ரீமா லாகோ, கணேஷ் யாதவ், ஸ்மிதா கோன்ட்கர், சக்தி கபூர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 


Post your comment





Related News
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions