என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி

Bookmark and Share

என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி

தனது இலங்கைப் பயணத்தின்போது, அதிபர் மைத்திரி பால சிறிசேனாவிடம் தமிழக மீனவர்களின் பிரச்சினை குறித்துப் பேச விரும்பினேன். 

ஆனால் தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பால் பயணத்தை ரத்து செய்துள்ளதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தனது இலங்கைப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்வோரின் முகத்திரையைக் கிழித்துள்ளார் ரஜினி.

அவரது அறிக்கையின் ஒரு பகுதியில், "இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனாவைச் சந்திக்க நேரம் கேட்டு, சந்தித்து, ஒரு ஜான் வயிற்றுக்காக உயிரைப் பணயம் வைத்து, வேறு எந்தத் தொழிலுமே தெரியாததால் கடலில் போய் மீன் பிடிக்கும் என்னுடைய மீனவ சகோதரர்களின் உயிரைப் பறித்து, அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை சிறைப்பிடித்து வைக்கும் சம்பவங்களை பத்திரிகைகளில் படிக்கும்போது நெஞ்சம் துடிக்கிறது. 

அதைப் பற்றி என்னளவில் அவருடன் இதற்கு ஒரு சுமூகமான தீர்வு காண வேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைக்க எண்ணியிருந்தேன்," என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்த் ஒரு மகத்தான கலைஞன். மக்கள் மத்தியில் அவருக்குள்ள செல்வாக்கு உலகறிந்தது. நிச்சயம் அவரது வார்த்தைகளுக்கு இலங்கை அரசு செவிசாய்க்கும் ஒரு வாய்ப்பு உள்ளது. அதைக் கெடுத்த அரசியல்வாதிகள் அம்பலப்பட்டு நிற்கிறார்கள், ரஜினியின் இலங்கைப் பயணம் ரத்தானதன் மூலம்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions