மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் ரஜினி பங்கேற்பு

Bookmark and Share

மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் ரஜினி பங்கேற்பு

தெலுங்கு நடிகரும், ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன் பாபுவின் மகன் திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். தமிழில் குரு உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் மோகன் பாபு.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்தார். இவரது மகனும், டோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகருமான மஞ்சு மனோஜூக்கும், ப்ரணதி என்பவருக்கும் இன்று திருமணம்.

மகனின் திருமணத்திற்கு திரைபிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரை அழைத்திருந்தார் மோகன் பாபு. பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும் திருமண அழைப்பு கொடுத்திருந்தார் மோகன் பாபு.

திருமணத்திற்கு முன்னதாக நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட ஏகப்பட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் நடிகைகள் த்ரிஷா, ஹன்சிகா, நடிகர் விக்ரம் பிரபு, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட நிறைய தமிழ் மற்றும் தெலுங்கு பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஐதராபாத்தில் இன்று பிரமாண்ட முறையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்றார். மோகன் பாபுவும், ரஜினியும் நெருங்கிய நண்பர்கள்.

இருவரது இல்ல விழாக்களிலும் இருவரும், இருவரது குடும்பமும் பங்கேற்கும். அதன்படி ரஜினி இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் ஐதராபாத் சென்று திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் ரஜினி.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions