புதிய பாதையில் ரஜினிகாந்த்.?

Bookmark and Share

புதிய பாதையில் ரஜினிகாந்த்.?

ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை ஒரு இயக்குனரான பா.ரஞ்சித் இயக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியில் வந்த போதே ரஜினிகாந்த் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில்  புதிய பாதை ஒன்றை ஆரம்பித்து, அடுத்த அத்தியாயத்தை ஆரம்பிக்கப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தான் இயக்கிய முதல் படமான 'அட்டகத்தி' படத்தை ஒரு வித்தியாசமான காதல் படமாகக் கொடுத்த பா.ரஞ்சித், இரண்டாவது படமான 'மெட்ராஸ்' படம் மூலம் தனக்கென ஒரு பார்வை இருக்கிறது என்பதை அழுத்தமாக வெளிப்படுத்தினார்.

கமர்ஷியல் சினிமா இயக்குனர்களின் மத்தியில் இருந்து விலகி தனித்து தெரிந்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற கதைக்களமும், பின்னணியும், அரசியல் பார்வையும் ஏராளமான விமர்சகர்களையும், திரை ரசிகர்களையும் கவர்ந்தது.

அப்படிப்பட்ட தனித்த பார்வை கொண்ட இயக்குனரின் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்றதுமே அவர் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து விட்டது.

கண்டிப்பாக வழக்கமான ரஜினிகாந்தை இந்தப் படத்தில் பார்க்க முடியாது என்று நம்பலாம். இயக்குனர் பா.ரஞ்சித் நிச்சயம் ரஜினியை வேறு ஒரு கோணத்தில் காட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

ரஜினியின் ஆரம்ப காலப் படங்களில் அவர் தேர்ந்தெடுத்த கதைகளும், கதாபாத்திரங்களும் இன்று வரை அவருடைய நடிப்பைப் பற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கின்றன.

அதன் பின் அவரை வணிக ரீதியான நடிகராக இந்தத் தமிழ்த் திரையுலகம் மாற்றிவிட்டது.  70 வயதைக் கடந்தும் அமிதாப்பச்சன் இன்றும் கோலோச்சிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் தென்னிந்தியாவின் அமிதாப்பச்சனாக இன்னும் நம்மை ரசிக்க வைப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்போம்.


Post your comment





Related News
\\\'நியூ ஜெனேரஷன்\\\' என்கிற அடையாளத்தை விரும்பாத சன்னி வெய்ன்..!
குறும்படங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் சன்னி வெய்ன்..!
\'பேருக்கு வில்லன்.. ஊருக்கு நல்லவன்\' - சன்னி வெய்னின் புதிய அவதராம்..!
நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 12 படங்கள் தேர்வு
நார்வே திரைப்பட விருதுகள்: சிறந்த படமாக பரதேசி தேர்வு..!
ரஜினி எப்போதோ தமிழராகி விட்டார்: சரத்குமார்..!
இயக்குனர் பாலு மகேந்திரா சற்றுமுன் மரணம்..!
15வருட கனவு படத்திற்கு உயிர் கொடுத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான்-இம்தாஸ் அலி..!
அடுத்தமாதம் வெளியாகிறது ஏ.ஆர் ரஹ்மானின் புதிய வீடியோ ஆல்பம்..!
நடிகை சுசித்ராசென் மாரடைப்பால் இன்று காலமானார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions