ரஜினி படத்தை இயக்கக் கூடாது...! டைரக்டர் ரஞ்சித்துக்கு தயாரிப்பாளர் கெடுபிடி!

Bookmark and Share

ரஜினி படத்தை இயக்கக் கூடாது...! டைரக்டர் ரஞ்சித்துக்கு தயாரிப்பாளர்  கெடுபிடி!

கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் இயக்குநரான பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார் சூர்யா. இந்தப் படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிப்பதாக இருந்தது.

இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மூலம் ரஜினிக்கு கதை சொன்னார் பா.ரஞ்சித். அவர் சொன்ன கதை ரஜினிக்குப் பிடித்துப்போக, அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்துவிட்டார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்துக்கான ஆரம்பக்கட்டபணிகள் நடைபெற்று வருகிறது. பா.ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி அவரது குருவான வெங்கட்பிரபு உட்பட திரையுலகில் உள்ள பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒரேஒருவர் மட்டும்...எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம். அவர் வேறு யாருமல்ல..தயாரிப்பாளர் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல் ராஜாதான்! மெட்ராஸ் படத்தை அடுத்து நீங்கள் ஸ்டுடியோக்ரீன் நிறுவனத்துக்கு படம் இயக்குவதாக அக்ரிமெண்ட் இருக்கிறது.

அப்படி இருக்கும்போது என் அனுமதி இல்லாமல் ரஜினி படத்தை இயக்க சம்மதித்தது ஏன்? சூர்யா நடிக்கும் படத்தை முடித்துவிட்டு ரஜினி படத்தை இயக்கப்போங்கள்... என்று ரஞ்சித்துக்கு கண்டிஷன் போட்டிருக்கிறார் ஞானவேல்ராஜா.

தன் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜாவின் இந்த கண்டிஷனைக் கேட்டதும் பா.ரஞ்சித் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions