இந்த’ இடத்திலும் கபாலி நஷ்டமா? இன்னொரு பிரபல விநியோகஸ்தர் அதிரடி!

Bookmark and Share

இந்த’ இடத்திலும் கபாலி நஷ்டமா? இன்னொரு பிரபல விநியோகஸ்தர் அதிரடி!

கபாலி, காஷ்மோரா, கொடி, தொடரி, போகன், பைரவா, சிங்கம் 3, கத்திசண்டை, ரெமோ என அண்மையில் வெளியான எல்லா பெரிய படங்களுமே விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டத்தை வழங்கியிருப்பதாக மூத்த விநியோகஸ்தர்  திருப்பூர் சுப்ரமணியம் அண்மையில் வாட்ஸ் அப்பில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மதுரை இம்பாலா தியேட்டர் ஓனர் மணிஷர்மா ஒரு வாட்ஸ் அப் ஆடியோவை  வெளியிட்டிருந்தார்.

அதில் கபாலி இம்பாலா தியேட்டரில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாகவும் மேலும் மதுரை ஏரியாவில் தனக்கு பெரும் வெற்றியையும் லாபத்தையும் பெற்றுத்தந்த படம் இதுதான் எனவும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் சேலத்தில் கபாலி படத்தை வாங்கி வெளியிட்ட நந்தா என்பவர் கபாலி தனக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்திருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார். சுமார் 3.6 கோடி இப்படத்தால் தனக்கு நஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions